/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை கொட்டினால் போலீஸ் நடவடிக்கை குப்பை கொட்டினால் போலீஸ் நடவடிக்கை
குப்பை கொட்டினால் போலீஸ் நடவடிக்கை
குப்பை கொட்டினால் போலீஸ் நடவடிக்கை
குப்பை கொட்டினால் போலீஸ் நடவடிக்கை
ADDED : செப் 09, 2025 10:26 PM

பெ.நா.பாளையம்; பொது இடத்தில் குப்பை கொட்டினால் போலீஸ் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என, பிளிச்சி ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிளிச்சி ஊராட்சி பகுதியில் பொது இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்தந்த பகுதி குடியிருப்புகளில் குப்பைகளை சேகரிக்க ஊராட்சி, ஊழியர்களை நியமனம் செய்த பிறகும், பொது இடங்களில் குப்பை கொட்டும் போக்கு தொடர்ந்தது. இதையடுத்து பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் பொது இடத்தில் குப்பை கொட்டாதீர்கள். மீறி குப்பைகளை கொட்டினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
இந்த இடம் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணிக்கப்படுவதால், காவல்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என்று, அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.