ADDED : செப் 09, 2025 10:26 PM
சூலுார்; சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 40. பா.ஜ. கிளை தலைவர். முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள காலி இடத்தில், அப்பகுதியில் உள்ளோர் தங்களது கார்களை நிறுத்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் தனது காரை அங்கு நிறுத்தியிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது, அவரது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது.
மற்றொரு காரும் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் . இதுகுறித்து அவர் சூலுார் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடயங்களை சேகரித்தனர்.
அருகில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து, காரை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.