/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : செப் 09, 2025 10:27 PM

கருமத்தம்பட்டி; செம்மாண்டாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, தலைமையாசிரியர் சுஜாதா தலைமையில் ஆசிரியர் தின விழா நடந்தது. ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி, பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.
கடந்தாண்டு, 10 வகுப்பு பொது தேர்வில், இப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு, 'சவுத் இந்தியா மோட்டார்ஸ்' நிர்வாக இயக்குனர் தண்டபாணி, ஊக்கத்தொகை, சான்றிதழ் மற்றும் பரிகள் வழங்கி பாராட்டினார். ஆசிரிய, ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ஊரின் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவ, மாணவியர், பெற்றோர் பலர் பங்கேற்றனர். இதேபோல், வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சசிக்குமார், ஆசிரியர்களை கவுரவித்தார்.