Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 4ல் துவக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 4ல் துவக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 4ல் துவக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 4ல் துவக்கம்

ADDED : மார் 25, 2025 09:27 PM


Google News
பொள்ளாச்சி; பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக மாநிலம் முழுவதும், கல்வி மாவட்டம் வாரியாக விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்யப்பட்டது. அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடைத்தாள் திருத்தும் மையமாக தேர்வு செய்யப்பட்டது.

இதனையடுத்து, வரும் ஏப்., 4ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கப்படுகிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் பானுமதி, முகாம் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் நாள் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும், ஏப்.,4ம் தேதி துவங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித்தேர்வாளர்கள், மற்றும் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள் என, 500 பேரும், 50 அலுவலக ஊழியர்களும் பணியில் ஈடுபட உள்ளனர். வரும், 17ம் தேதிக்குள் பணிகள் முடித்து கணினியில் மதிப்பெண் பதிவு செய்யப்படும்.

அதே போன்று, பிளஸ் 1பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும், ஏப்., 19ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

விரும்பும் மையத்தில் பணி


தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விடைத்தாள் திருத்தும் பணி முகாமில், ஆசிரியர்கள் தங்கி கடந்த காலங்களில் பணிபுரிந்து வந்தனர். தற்போது, ஆசிரியர்கள் வீட்டில் இருந்து விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு வந்து பணிபுரிகின்றனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களின் முகவரி, கோவை கல்வி மாவட்டத்திலும், கோவை கல்வி மாவட்ட ஆசிரியர்களில் சிலர் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலும் வசித்து வருவதால், கடந்தாண்டு வரை அவர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்புகின்ற விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தாண்டும், ஆசிரியர்கள் விரும்பும் மையத்தில் பணியாற்ற ஏதுவாக வாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us