/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலக்குடிக்கு மீண்டும் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை சாலக்குடிக்கு மீண்டும் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
சாலக்குடிக்கு மீண்டும் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
சாலக்குடிக்கு மீண்டும் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
சாலக்குடிக்கு மீண்டும் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
ADDED : மார் 25, 2025 09:27 PM
வால்பாறை; சாலக்குடிக்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என, இருமாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில் இருந்து, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக, கேரள மாநிலம் சாலக்குடிக்கு, கேரள அரசு மற்றும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இது தவிர, சாலக்குடியிலிருந்து மளுக்கப்பாறை வரை, தினமும் ஐந்து முறை கேரள அரசு பஸ் இயக்கப்படுகிறது.
வால்பாறையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணியர், சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண செல்கின்றனர். இதே போல், கேரளாவிலிருந்து சாலக்குடி, அதிரப்பள்ளி வழியாக வால்பாறைக்கும் அதிக அளவில் சுற்றுலா பணியர் வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், கொரோனா காலத்தில், வால்பாறை - சாலக்குடி இடையே அரசு பஸ் இயக்கத்தை நிறுத்தியது. அதன்பின், பஸ் இயக்கவில்லை. இதனால், இருமாநில மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பயணியர் கூறியதாவது:
கேரள மாநிலத்தில் இருந்து, வால்பாறைக்கு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், வால்பாறையில் இருந்து, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சாலக்குடி வரை பஸ் இயக்குவதில்லை. ஏற்கனவே இயக்கப்பட்ட பஸ்சை மீண்டும் சாலக்குடிக்கு இயக்கினால், மக்கள் போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், சாலக்குடிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.