/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோடை விடுமுறையில் 330 மனுக்கள் மீது உத்தரவு கோடை விடுமுறையில் 330 மனுக்கள் மீது உத்தரவு
கோடை விடுமுறையில் 330 மனுக்கள் மீது உத்தரவு
கோடை விடுமுறையில் 330 மனுக்கள் மீது உத்தரவு
கோடை விடுமுறையில் 330 மனுக்கள் மீது உத்தரவு
ADDED : மே 31, 2025 04:53 AM
கோவை; கோவையில் கோர்ட் கோடைவிடுமுறை நாட்களில், ஜாமின் மற்றும் முன்ஜாமின் தொடர்பாக, 330 மனுக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு, மே 31 வரை, கோர்ட்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ் கோர்ட்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் முன்சிப் கோர்ட்கள் செயல்படவில்லை.
அனைத்து மாஜிஸ்திரேட் மற்றும் சிறப்பு கோர்ட்கள் செயல்பட்டன.
கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், கோடை விடுமுறையில் ஜாமின் மற்றும் முன்ஜாமின் மனுக்கள் மீது, நீதிபதி ஜான்மினோ முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
கிரிமினல் வழக்குகளில், மே 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பைலிங் செய்யப்பட்ட மனுக்கள் முறையே, 8, 15, 22, மற்றும் 29 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது.
ஜாமின் மற்றும் முன்ஜாமின் தொடர்பாக மொத்தம், 344 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், இரு தரப்பு விசாரணை நடத்தப்பட்டு, 330 மனுக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.