/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெண்களின் படத்தை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது பெண்களின் படத்தை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது
பெண்களின் படத்தை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது
பெண்களின் படத்தை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது
பெண்களின் படத்தை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது
ADDED : மே 10, 2025 02:07 AM

கோவை, : உறவினர் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றிய நபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சாய்பாபா காலனியை சேர்ந்த விஜயராஜ் மகன் அஜய் கண்ணன், 30. விஜயராஜ் என்.எஸ்.ஆர்., ரோட்டில், டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். அஜய் கண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அஜய் கண்ணனின் உறவினர் ஒருவர், அவரை வேலைக்கு செல்லுமாறு கூறி அறிவுரை வழங்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அஜய் கண்ணன், அவரது உறவினரின் மனைவி மற்றும் மகளின் போட்டோக்களை, தவறாக சித்தரித்து போன் எண்களுடன் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதனால், பலர் பகல், இரவு பாராமல் பெண்ணின் எண்ணுக்கு அழைத்து, தொந்தரவு செய்துள்ளனர். மனமுடைந்து போன அப்பெண், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அஜய் கண்ணன் இது போன்ற பல பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இணையதளத்தில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அஜய் கண்ணனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.