/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பேட்டா' தராததால் ஆத்திரம்; லாரிக்கு தீ வைத்த டிரைவர் 'பேட்டா' தராததால் ஆத்திரம்; லாரிக்கு தீ வைத்த டிரைவர்
'பேட்டா' தராததால் ஆத்திரம்; லாரிக்கு தீ வைத்த டிரைவர்
'பேட்டா' தராததால் ஆத்திரம்; லாரிக்கு தீ வைத்த டிரைவர்
'பேட்டா' தராததால் ஆத்திரம்; லாரிக்கு தீ வைத்த டிரைவர்
ADDED : மே 10, 2025 02:07 AM
கோவை : டிரைவர் 'பேட்டா' தராத ஆத்திரத்தில், லாரிக்கு தீ வைத்த டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயலிங்கம், 39; சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரிடம் சேலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் மாதம், ரூ.15 ஆயிரம் சம்பளத்துக்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம், உக்கடம் பகுதியில் உள்ள விஜயலிங்கத்தின் அலுவலகத்திற்கு சென்ற கார்த்திக், கடந்த 6ம் தேதி வேலை செய்ததற்கு, 'டிரைவர் பேட்டா' கொடுக்கும் படி கேட்டார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. பின்னர், அங்கிருந்து புறப்பட்ட கார்த்திக், வெளியில் நின்று கொண்டிருந்த லாரிக்கு தீ வைத்து விட்டு தப்பினார். விஜயலிங்கம் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு, தீயை அணைத்தார். புகாரின்படி, பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.