/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திருநங்கையருக்கு தனி கழிப்பிடம் வேண்டும் திருநங்கையருக்கு தனி கழிப்பிடம் வேண்டும்
திருநங்கையருக்கு தனி கழிப்பிடம் வேண்டும்
திருநங்கையருக்கு தனி கழிப்பிடம் வேண்டும்
திருநங்கையருக்கு தனி கழிப்பிடம் வேண்டும்
ADDED : மே 10, 2025 02:08 AM
கோவை : ''அனைத்து அரசு பேருந்து நிலையங்களிலும், திருநங்கைகளுக்கு ஏற்ப உருவாக்க வேண்டும்,'' கோவை வானவில் கூட்டமைப்பினர் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் தன்பால் ஈர்ப்பாளர்கள் ஆண் மற்றும் பெண் இருபாலின ஈர்ப்பாளர்கள் வானவில் கூட்டமைப்பு சார்பில், பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம், பிரஸ் கிளப் அரங்கில் நேற்று நடந்தது. அமைப்பின் நிர்வாகிகள் சிவா மற்றும் பீனா ஆகியோர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் மற்றும் பஞ்சப்பூரில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில், திருநங்கைகளுக்கு தனி கழிப்பறைகளைத் திறந்த அரசுக்கு நன்றி.
இது போல், அனைத்து அரசு பேருந்து நிலையங்களிலும், பாலின நடுநிலை கழிப்பறைகளை உருவாக்க வேண்டும். நல வாரியத்தில் அனைத்து அம்சங்களிலும், திருநர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வேண்டும்.
அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைப் பாலினத்தவர்களுக்கு, இரண்டு சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும். தொழில்முனைவோருக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து கூடுதல் நிதி உதவி வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.