ADDED : செப் 20, 2025 11:47 PM

கோவை : கோவை, செல்வபுரத்தை சேர்ந்தவர் ராமநாதன், 55. இவரது மனைவி அனுராதா, 50. ராமநாதன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஜன., 20ல் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ராமநாதன், மனைவி அனுராதாவை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்தார். செல்வபுரம் போலீசார், ராமநாதனை சிறையில் அடைத்தனர். கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சிவக்குமார், ராமநாதனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.