/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துணி பைகள் தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி துணி பைகள் தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி
துணி பைகள் தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி
துணி பைகள் தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி
துணி பைகள் தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி
ADDED : செப் 20, 2025 11:49 PM

கோவை : இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரிதம் பெண்கள் சமூகப்பணி மையம் சார்பில், ஆடைகளை பயன்படுத்தி பைகள் தயாரிக்க, இலவச பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்., மாதம் இரண்டாம் வாரம் துவங்க உள்ள இப்பயிற்சியில், 18 - 45 வயதுடைய பெண்கள் பங்கேற்கலாம். 26 நாட்கள் காலை 10 முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெறும். லேப்டாப் பைகள், ஷாப்பிங், பில்லோ கவர், பவுச், டேபிள் மேட் உள்ளிட்ட பல்வேறு துணி சார்ந்த பைகள் தைப்பது தொடர்பாக பயிற்றுவிக்கப்படும்.
தவிர, தொழில் துவங்க வங்கி கடன் பெறுதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு, 70129 55419, 89405 67882 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம். கல்வித்தகுதி அவசியம் இல்லை. தையல் அடிப்படை பயிற்சி தெரியாதவர்கள் கூட பங்கேற்கலாம். பயிற்சி முடிப்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.