Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 23 ஆண்டுகளாக 50 கிலோ எடை இதோ இதுதான் ரகசியம்

23 ஆண்டுகளாக 50 கிலோ எடை இதோ இதுதான் ரகசியம்

23 ஆண்டுகளாக 50 கிலோ எடை இதோ இதுதான் ரகசியம்

23 ஆண்டுகளாக 50 கிலோ எடை இதோ இதுதான் ரகசியம்

ADDED : செப் 20, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வாழ்வியல் மைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரியை பார்த்தால், 51 வயது என்று சொல்லி விட முடியாது. அந்தளவுக்கு உடலை 'பிட்' ஆக வைத்திருக்கிறார்.

தனது 'பிட்னெஸ்' ரகசியத்தை நம்முடன் பகிர்கிறார்...

''இயற்கையுடன் இணைந்த வாழ்வியல் முறையை விரும்புகிறேன். தினந்தோறும் ஒரு மணி நேரம் யோகா செய்வது என் வழக்கம். சிறிய தொலைவுள்ள இடங்களுக்கு நடந்து செல்வதை விரும்புவேன். அனைத்து ஊட்டச்சத்து உள்ள சரிவிகித உணவை உண்பேன்.

வாரம் ஒரு முறை விரதம், டயட். முடியும் போது ஏதாவது ஒரு நேரம் பழங்கள் மட்டுமோ, நீர் மட்டுமோ எடுத்துக்கொள்வேன். உடல் நிலை சரியில்லாத சமயங்களில், வழக்கமான உணவு தவிர்த்து, நன்றாக திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்வேன்,''

''இந்த 51 வயதிலும், எந்த உடல் நலக்கோளாறும் இல்லை. 23 ஆண்டுகளாக 50 கிலோ என்ற எடையை 'மெயின்டெய்ன்' செய்து வருகிறேன். ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் உணவு, உடற்பயிற்சி, உறக்கம் இந்த மூன்றை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து உணவு அதிகம் சாப்பிடவேண்டும். உடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் மட்டுமே நம் மனநலம், வேலை, குடும்பம் அனைத் தையும் சுமூகமாக கொண்டு செல்ல முடியும்,'' என்றார் டாக்டர் புவனேஸ்வரி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us