ADDED : செப் 14, 2025 11:19 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே வேளாங்கண்ணி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த்ராஜ், 61. கிரில் ஒர்க் செய்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் நேற்று காலை சர்சுக்கு சென்றார்.
பின் வீட்டிற்கு வந்த ஆனந்தராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார், விசாரிக்கின்றனர்.--