/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்கியதால் மகிழ்ச்சி சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்கியதால் மகிழ்ச்சி
சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்கியதால் மகிழ்ச்சி
சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்கியதால் மகிழ்ச்சி
சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்கியதால் மகிழ்ச்சி
ADDED : செப் 14, 2025 11:12 PM

வால்பாறை; சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க அரசின் சார்பில், ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக, புதுத்தோட்டம், குரங்குமுடி, சின்கோனா, அக்காமலை கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில், சிங்கவால் குரங்குகள் அதிகம் உள்ளன.
கூட்டுக்குடும்பமாக வாழும் இந்த குரங்குகள், வனத்தில் கிடைக்கும் பழங்கள், கொட்டைகளை உணவாக உட்கொள்கின்றன.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் சரிந்து வருவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த வகை குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில், சிங்கவால் குரங்குகளின் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சிங்கவால் குரங்கு, கழுதைப்புலி, முள்எலி, செந்துடுப்பு மீன் ஆகியவற்றை பாதுகாக்கும் திட்டங்களுக்கு, தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. வன விலங்குகளை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.