/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 10 ஆண்டுகளாக பஸ் இயக்காததால் அதிருப்தி 10 ஆண்டுகளாக பஸ் இயக்காததால் அதிருப்தி
10 ஆண்டுகளாக பஸ் இயக்காததால் அதிருப்தி
10 ஆண்டுகளாக பஸ் இயக்காததால் அதிருப்தி
10 ஆண்டுகளாக பஸ் இயக்காததால் அதிருப்தி
ADDED : செப் 14, 2025 11:07 PM
வால்பாறை; வால்பாறை, வேவர்லி எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ் இயக்காததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை அடுத்துள்ளது வாட்டர்பால்ஸ் எஸ்டேட். இங்குள்ள வேவர்லி எஸ்டேட்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் வால்பாறை, வாட்டர்பால்ஸ், அட்டகட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் படிக்கின்றனர்.
வாட்டர்பால்ஸ் பிரிவிலிருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள வேவர்லி எஸ்டேட்க்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை, வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பள்ளி மாணவர்கள் வசதிக்காக காலை, மாலை நேரங்களில் பஸ் இயக்கப்பட்டது.
அதன் பின், ரோடு குண்டும் குழியுமாக இருப்பதாக கூறி, பஸ் இயக்கப்படவில்லை. தற்போது புதியதாக ரோடு அமைத்த பிறகும் இன்று வரை பஸ் இயக்கவில்லை.
தன்னார்வலர்கள் கூறியதாவது: வேவர்லி எஸ்டேட்டிற்கு ரோடு அமைத்த பிறகும், கடந்த பத்து ஆண்டுகளாக பஸ் இயக்காததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் வனவிலங்கு தாக்கி சிறுவன் உயிரிழந்தான். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த எஸ்டேட் பகுதியிலிருந்து, பள்ளி செல்லும் மாணவர்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது, உயிருக்கு பயந்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி, வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் வேவர்லி எஸ்டேட் பகுதிக்கு மீண்டும் வழக்கம் போல் பஸ் இயக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.