/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மானிய திட்டம் குறித்து அறிய விவசாயிகளுக்கு வாய்ப்பு மானிய திட்டம் குறித்து அறிய விவசாயிகளுக்கு வாய்ப்பு
மானிய திட்டம் குறித்து அறிய விவசாயிகளுக்கு வாய்ப்பு
மானிய திட்டம் குறித்து அறிய விவசாயிகளுக்கு வாய்ப்பு
மானிய திட்டம் குறித்து அறிய விவசாயிகளுக்கு வாய்ப்பு
ADDED : செப் 11, 2025 09:37 PM
அன்னுார் ; கெம்பநாயக்கன்பாளையம் மற்றும் நாரணாபுரத்தில் இன்று 'உழவரைத் தேடி' முகாம் நடைபெறுகிறது.
வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், 'உழவரைத் தேடி' என்னும் வேளாண் உழவர் நலத்துறை முகாம் அன்னுார் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று (12ம் தேதி) காலை 9:30 மணிக்கு காரே கவுண்டம்பாளையம் ஊராட்சி விவசாயிகளுக்கு, கெம்பநாயக்கன்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் முகாம் நடைபெறுகிறது. நாரணாபுரம் ஊராட்சி விவசாயிகளுக்கு, நாரணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, வேளாண் விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் குறித்து தெரிவிக்கின்றனர்.
'விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்,' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.