/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூரிய வீடு மின்சார திட்டத்தில் 30 ஆயிரம் இணைப்பு இலக்கு சூரிய வீடு மின்சார திட்டத்தில் 30 ஆயிரம் இணைப்பு இலக்கு
சூரிய வீடு மின்சார திட்டத்தில் 30 ஆயிரம் இணைப்பு இலக்கு
சூரிய வீடு மின்சார திட்டத்தில் 30 ஆயிரம் இணைப்பு இலக்கு
சூரிய வீடு மின்சார திட்டத்தில் 30 ஆயிரம் இணைப்பு இலக்கு
ADDED : செப் 11, 2025 09:37 PM
கோவை; மத்திய அரசின் சூரிய வீடு மின் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் 30 ஆயிரம் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் மின்சாரம் அவசரத் தேவைகளில் ஒன்றாகி விட்டது. பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின் வினியோகத்தை நிறுத்தினாலும் கூட, பொதுமக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகின்றனர். உடனே, யு.பி.எஸ்., வசதி ஏற்படுத்திக் கொள்கின்றனர். மின் உபயோகம் அதிகமாகும்போது, கட்டணமும் அதிகமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளதால், மாற்று எரிசக்தி ஆற்றல் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. அதன் அடிப்படையில், சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2026-27க்குள் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில், 1.80 லட்சம் இணைப்பு, கோவையில், 30 ஆயிரம் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் சார்பில், ஒவ்வொரு துணை நிலையம் வாரியாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல் பொருத்த கடனுதவியுடன் மானியம் வழங்கப்படுகிறது. மானியம் வழங்குவதால், பொதுமக்களும் சூரிய ஒளி மின்னுற்பத்தி செய்வதற்கு விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், 30 ஆயிரம் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, 6,000 வீடுகளுக்கு வழங்கியுள்ளோம். 1 கிலோவாட் பொருத்துபவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய், 2 கி.வாட்., 60 ஆயிரம் , 3 கி.வாட் அதற்கு மேல் பொருத்துபவர்களுக்கு 78 ஆயிரம் அரசு மானியம் வழங்குகிறது.
இதற்கான செலவினத்தில், 90 சதவீதத்தை, 10 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் வகையில் வங்கி கடன் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள், www.pmsuryaghar.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆய்வு செய்து, இணைப்பு கொடுத்த ஒரு வாரத்தில் மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.