/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் மீது கல் வீசாதீர்: மாணவர்களுக்கு 'பாடம்' ரயில் மீது கல் வீசாதீர்: மாணவர்களுக்கு 'பாடம்'
ரயில் மீது கல் வீசாதீர்: மாணவர்களுக்கு 'பாடம்'
ரயில் மீது கல் வீசாதீர்: மாணவர்களுக்கு 'பாடம்'
ரயில் மீது கல் வீசாதீர்: மாணவர்களுக்கு 'பாடம்'
ADDED : செப் 11, 2025 09:38 PM

கோவை; கோவை வழியாக செல்லும் ரயில்களில் கல்வீசுவது, தண்டவாளங்களில் கல் வைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதை தடுக்க ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பீளமேடு கோபால்நாயுடு மேல்நிலைப்பள்ளியில், ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். ரயில்கள் மீது கல்வீசுவதால் ஏற்படும் பிரச்னை, அதற்குரிய தண்டனை குறித்து விவரித்தனர்.
அதேபோல், தண்டவாளத்தில் கல் வைத்தால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் தெரிவித்தனர். ரயில் பாதையை கடக்கும்போது விழிப்புடன் இருக்கவும், அவ்வாறு அத்துமீறி கடந்தால் வழங்கப்படும்தண்டனை குறித்தும் விளக்கினர்.
இதில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.