/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வலுவிழந்த மரம் அகற்ற எதிர்பார்ப்பு வலுவிழந்த மரம் அகற்ற எதிர்பார்ப்பு
வலுவிழந்த மரம் அகற்ற எதிர்பார்ப்பு
வலுவிழந்த மரம் அகற்ற எதிர்பார்ப்பு
வலுவிழந்த மரம் அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : மே 27, 2025 09:56 PM

போத்தனூர்: கோவை, போத்தனூர் அருகே மாநகராட்சியின் 98வது வார்டில், பஞ்., ஆபீஸ் வீதி உள்ளது. இவ்வீதியின் பிரதான சாலையில், 40 ஆண்டுகளுக்கு மேலான பூவரச மரம் உள்ளது.
இம்மரத்தின் கீழ்பாகம் வலுவிழந்து உள்ளது. மரம் ஒருபுறமாக சாய்ந்து, அதன் கிளைகள் அருகேயுள்ள இரும்பு கம்பங்களின் மேல் விழுந்துள்ளன. இதுவே மரம் தற்போதைக்கு கீழே விழாமல் தாங்கியுள்ளன. தற்போது மழை பெய்வதால், மரம் சாய்ந்து விழ வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் எதுவும் நிகழும் முன், மரத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.