/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 33 சவரன் நகை கொள்ளை; திருடனிடம் விசாரணை 33 சவரன் நகை கொள்ளை; திருடனிடம் விசாரணை
33 சவரன் நகை கொள்ளை; திருடனிடம் விசாரணை
33 சவரன் நகை கொள்ளை; திருடனிடம் விசாரணை
33 சவரன் நகை கொள்ளை; திருடனிடம் விசாரணை
ADDED : மே 27, 2025 10:20 PM
கோவை : துடியலுாரில் வீட்டின் பூட்டை உடைத்து, 33 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவரை, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
துடியலுார், சாய் நகரை சேர்ந்தவர் சாய் வசந்த், 34; தனியார் நிறுவன ஊழியர். பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள, தனது மனைவியின் வீட்டுக்கு கடந்த, 11ம் தேதி சென்ற அவர், மறுநாள் வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 33.5 சவரன் தங்க நகைகள் திருட்டுப்போயிருந்தன.
புகாரின்படி, துடியலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசார் நடத்திய ஆய்வில், வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர், உள்பக்கமாக பூட்டிவிட்டு, நகைகளை கொள்ளை அடித்து விட்டு, பின் கதவு வழியாக தப்பி சென்றது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது நாகப்பட்டினம், திருக்குவளையை சேர்ந்த அமிர்தரூபன், 28 என்பதும், அவர் மற்றொரு வழக்கில் புதுக்கோட்டையில் கைதாகி சிறையில் உள்ளதும் தெரியவந்தது. துடியலுார் போலீசார் அமிர்தரூபனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.