/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கை கழுவுவது எப்போதுமே நல்லதுதான்: அரசு மருத்துவமனை டீன் அறிவுறுத்தல் கை கழுவுவது எப்போதுமே நல்லதுதான்: அரசு மருத்துவமனை டீன் அறிவுறுத்தல்
கை கழுவுவது எப்போதுமே நல்லதுதான்: அரசு மருத்துவமனை டீன் அறிவுறுத்தல்
கை கழுவுவது எப்போதுமே நல்லதுதான்: அரசு மருத்துவமனை டீன் அறிவுறுத்தல்
கை கழுவுவது எப்போதுமே நல்லதுதான்: அரசு மருத்துவமனை டீன் அறிவுறுத்தல்
ADDED : மே 27, 2025 09:56 PM
கோவை : தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள சூழலில், மருத்துவமனை வார்டுகளில் தண்ணீர் புகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, பொதுப்பணித்துறை மற்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுடுதண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும், உணவு வினியோகத்தில் சுகாதாரத்தை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளோம்.
பொதுமக்கள் முடிந்தவரை வெளியிடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. நீர் வழியாக நிறைய தொற்றுநோய் பரவும் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். முன்பே நுரையீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, எய்ட்ஸ், காசநோய் பாதிப்பு உள்ளவர்கள், மிகவும் கவனமாக இருக்கவேண்டும்,'' என்றார்.
கொரோனா பாதிப்பு குறித்து கேட்டதற்கு, ''கொரோனா பாதிப்பு பெரிதளவில் இல்லை. சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. பதற்றம் கொள்ளும்படி ஏதும் இல்லை. அனைவருக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கைகளை சரியாக கழுவுதல் என்பது, கொரோனா மட்டுமின்றி அனைத்து வித தொற்று நோய் தடுப்புக்கும் பொருந்தும். அதை எப்போதும் செய்யவேண்டியது அவசியம்,'' என்றார்.