/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீட்டு கதவை உடைத்துச் சென்று புண்ணாக்கு சாப்பிட்ட யானை வீட்டு கதவை உடைத்துச் சென்று புண்ணாக்கு சாப்பிட்ட யானை
வீட்டு கதவை உடைத்துச் சென்று புண்ணாக்கு சாப்பிட்ட யானை
வீட்டு கதவை உடைத்துச் சென்று புண்ணாக்கு சாப்பிட்ட யானை
வீட்டு கதவை உடைத்துச் சென்று புண்ணாக்கு சாப்பிட்ட யானை
ADDED : ஜூலை 04, 2025 11:00 PM

தொண்டாமுத்துார்; அட்டுக்கல்லில், இரவில் தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, வீட்டின் கதவை உடைத்து, புண்ணாக்கு, தவிடு சாப்பிட்டுச் சென்றது.
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட யானை மடுவு வனப்பகுதியில் இருந்து, நேற்றிரவு, ஒற்றைக் காட்டு யானை வெளியேறியது. அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்தது. இதுகுறித்து விவசாயிகள் அளித்த தகவலின்பேரில், வனத்துறையினர் விரைந்து வந்து, காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அங்கிருந்து நகர்ந்த ஒற்றை காட்டு யானை, தோட்டங்கள் வழியாக மேற்கு நோக்கிச் சென்றது. இரவு, 10:00 மணிக்கு, அட்டுக்கல், ஆலங்குட்டை அருகே உள்ள ராஜப்பன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்தது. தோட்டத்தில் உள்ள புதிய வீட்டில் ராஜப்பன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அதன் அருகிலுள்ள பழைய ஓட்டு வீட்டில், புண்ணாக்கு தவிடு உள்ளிட்ட மாட்டு தீவனங்களை வைத்திருந்தார்.
காட்டு யானை, ஓட்டு வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தி, அதற்குள் இருந்த புண்ணாக்கு, தவிடுகளை சாப்பிட்டு விட்டுச் சென்றது.
வனத்துறையினர் பட்டாசு வெடித்து, காட்டு யானையை, அட்டுக்கல் வனப்பகுதிக்குள் விரட்டினர்.