/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வியாபாரியிடம் வழிப்பறி; இருவருக்கு ஓராண்டு சிறை வியாபாரியிடம் வழிப்பறி; இருவருக்கு ஓராண்டு சிறை
வியாபாரியிடம் வழிப்பறி; இருவருக்கு ஓராண்டு சிறை
வியாபாரியிடம் வழிப்பறி; இருவருக்கு ஓராண்டு சிறை
வியாபாரியிடம் வழிப்பறி; இருவருக்கு ஓராண்டு சிறை
ADDED : ஜூலை 04, 2025 11:00 PM
கோவை; வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில், இருவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் அருள்பிரசாத்; மளிகை கடை நடத்தி வரும் இவர், 2019, ஜன., 21, இரவில் கடையை பூட்டி விட்டு, வீட்டுக்குச் சென்றார். அப்போது, சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், புலியகுளத்தைச் சேர்ந்த மணிவண்ணன்,34, விஜயகுமார்,30, ஆகியோர் வழிமறித்து, அவரிடம் இருந்து, 15,000 ரூபாய் பறித்து தப்பினர்.
ரத்தினபுரி போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது, கோவை ஜே.எம்., 2 கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.