Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடுகளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மின் ஒயரிங் சரி செய்வது அவசியம்

வீடுகளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மின் ஒயரிங் சரி செய்வது அவசியம்

வீடுகளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மின் ஒயரிங் சரி செய்வது அவசியம்

வீடுகளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மின் ஒயரிங் சரி செய்வது அவசியம்

ADDED : ஜூலை 04, 2025 11:01 PM


Google News
கோவை ; 'ஐந்தாண்டுக்கு ஒருமுறை வீடுகளில் மின் ஒயரிங்குகளை சோதனை செய்ய வேண்டும்; தேவைப்பட்டால் மாற்ற வேண்டும்' என, தமிழக மின் ஆய்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மின்சார பாதுகாப்பு மற்றும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, முதுநிலை மின் ஆய்வாளர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மின் ஆய்வுத்துறை சார்பில், 'ஸ்மார்ட் எனர்ஜி, பாதுகாப்பான நாடு' என்ற கருப்பொருளுடன், மின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் விபத்தை தடுக்க, மெயின் ஸ்விட்ச் போர்டில், மின் கசிவு தடுப்பான் பொருத்த வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை வீடுகளில் மின் ஒயரிங்குகளை சரிபார்க்க வேண்டும்; தேவை இருப்பின் அதை மாற்ற வேண்டும்.

மழைக்காலங்களில் மின் பகிர்வு பெட்டிகளின் ஸ்டே ஒயர்கள் மற்றும் எர்த் பிட் அருகே செல்லக்கூடாது. இடி, மின்னலின்போது மின் சாதனங்கள், போன்களை அணைத்து வைக்க வேண்டும். தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான மின்கலனில் ஆற்றல் சேமிப்பு, மின்சார வாகன சார்ஜிங், சூரிய ஒளி மின்சார அமைப்புகளை மத்திய மின்சார ஆணையத்தின் விதிமுறைப்படி நிறுவ வேண்டும்.

மின்கலனில் ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற, அனுபவமுள்ள நிபுணர்கள் வாயிலாகவே அமைக்க வேண்டும்.

மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் போது, சேதமடைந்த சார்ஜரையோ, எக்ஸ்டன்சன் பாக்ஸ் அல்லது மல்டி பிளக் அடாப்டரையோ பயன்படுத்தக்கூடாது. நீர்படிந்த இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டாம்.

சூரிய ஒளி மின்சார அமைப்புகளின் மேற்கூரையின் உறுதி தன்மையை தகுதி வாய்ந்த பொறியாளர் வாயிலாக அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தால், மின் விபத்தை தவிர்க்கலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us