/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., முன்னணி ஆரம்பம் முதலே...! தொடர்ந்து அ.தி.மு.க.,வை துரத்திய பா.ஜ.,ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., முன்னணி ஆரம்பம் முதலே...! தொடர்ந்து அ.தி.மு.க.,வை துரத்திய பா.ஜ.,
ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., முன்னணி ஆரம்பம் முதலே...! தொடர்ந்து அ.தி.மு.க.,வை துரத்திய பா.ஜ.,
ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., முன்னணி ஆரம்பம் முதலே...! தொடர்ந்து அ.தி.மு.க.,வை துரத்திய பா.ஜ.,
ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., முன்னணி ஆரம்பம் முதலே...! தொடர்ந்து அ.தி.மு.க.,வை துரத்திய பா.ஜ.,
ADDED : ஜூன் 05, 2024 01:26 AM

- நமது நிருபர் குழு -
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, ஓட்டு எண்ணிக்கை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. ஆரம்பம் முதலே, தி.மு.க., ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பா.ஜ.,வும் துரத்தி வந்தது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில், 15 லட்சத்து, 97 ஆயிரத்து, 467 வாக்காளர்கள் உள்ளனர்.
தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி, அ.தி.மு.க., கார்த்திகேயன், பா.ஜ., வசந்தராஜன், நாம் தமிழர் கட்சி சுரேஷ்குமார் உட்பட, 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஏப்., 19ல் நடந்த தேர்தலில், 11 லட்சத்து, 24 ஆயிரத்து 743 பேர் ஓட்டுப்பதிவு செய்திருந்தனர். ஓட்டு சதவீதம், 70.41 ஆக இருந்தது.
பதிவான ஓட்டுக்கள் நேற்று பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எண்ணிக்கை செய்யப்பட்டன. பலத்த சோதனைகளுக்கு பின், ஓட்டு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தலா, 14 டேபிள்கள் அமைக்கப்பட்டிருந்தது.
தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு தொகுதிகளுக்கு தலா, 23 சுற்றுக்களும்; பொள்ளாச்சி - 20, வால்பாறை - 17, உடுமலை - 22, மடத்துக்குளம் - 21 என, 126 சுற்றுக்கள் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
முதலில் தபால் ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டது; மொத்தம், 6,084 பதிவாகியிருந்தது. சட்டசபை தொகுதி வாரியாக தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு, அந்தந்த வேட்பாளருக்கான பெட்டியில் பிரித்து அடுக்கப்பட்டது.
தொடர்ந்து, பாதுகாப்பு அறையிலிருந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு, டேபிள்களில் ஓட்டு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வேட்பாளர் வாரியாக, பதிவான ஓட்டுக்களை அலுவலர்கள் தெரிவித்து, பதிவு செய்து வந்தனர். அதனை, வேட்பாளர்களின் முகவர்களும் சுற்று வாரியாக குறிப்பெடுத்தனர்.
தொடர்ந்து ஆதிக்கம்
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, தி.மு.க., வேட்பாளர் முன்னணியில் இருந்தார். ஆறு சட்டசபை தொகுதியில், கிணத்துக்கடவு, மடத்துக்குளம் தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளரை விட, தி.மு.க., வேட்பாளர் அதிகளவு ஓட்டுக்களை பெற்றிருந்தார்.
அடுத்ததாக, தொண்டாமுத்துார், உடுமலை, பொள்ளாச்சி தொகுதிகளிலும், தி.மு.க., கூடுதல் ஓட்டுக்களை பெற்று, வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.
பின் தொடர்ந்த பா.ஜ.,
ஒவ்வொரு சுற்றிலும், அ.தி.மு.க., வேட்பாளருக்கு இணையாகவே, பா.ஜ., வேட்பாளரும் ஓட்டுக்கள் பெற்றார். ஒரு சில ஓட்டுச்சாவடிகளில், அ.தி.மு.க.,வை விட, கூடுதலாக ஓட்டுப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், அ.தி.மு.க., முகவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பா.ஜ., வெற்றி வாய்ப்பை பெற முடியாவிட்டாலும், அ.தி.மு.க.,வை பின்தொடர்ந்து ஓட்டுக்களை பெற்றதால், பா.ஜ., கட்சியினர் நிம்மதியடைந்தனர்.
'நோ' சொல்ல முடியாத 'நோட்டா'
பொள்ளாச்சி தொகுதியில், 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், கடைசியில் இருந்த 'நோட்டா' வும், ஓட்டு எண்ணிக்கை பதிவில் இடம் பெற்று வந்தது. ஆறு சுற்றுக்கள் முடிந்தும், சுயே., வேட்பாளர்கள் பூஜ்யம் முதல், 800 ஓட்டுக்கள் வரை மட்டுமே பெற்றிருந்தனர்.
ஆனால், ஒவ்வொரு சுற்றிலும், நோட்டா, 500 முதல், 800 ஓட்டுக்களை பெற்று, யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என, வாக்காளர்கள் 'நோட்டா' வை தேர்வு செய்தது தெரிந்தது. 22வது சுற்று முடிவில், 14,280 ஓட்டுக்கள் பெற்றிருந்தது.
மேலும் செய்தி, படங்கள் கடைசி பக்கம்