/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்; நெரிசலால் திணறும் பொதுமக்கள் ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்; நெரிசலால் திணறும் பொதுமக்கள்
ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்; நெரிசலால் திணறும் பொதுமக்கள்
ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்; நெரிசலால் திணறும் பொதுமக்கள்
ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்; நெரிசலால் திணறும் பொதுமக்கள்
ADDED : ஜூன் 05, 2024 01:24 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், 'நோ-பார்க்கிங்' பகுதி மற்றும் ரோட்டோரங்களை ஆக்கிரமித்து வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியில் வணிக வளாகங்கள் அதிகளவு உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களில், 'பார்க்கிங்' வசதியில்லாததால், வாகனங்கள் ரோடுகளில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு, தாலுகா அலுவலகம் ரோடு, அரசு மருத்துவமனை ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய போக்குவரத்து நிறைந்த ரோடுகளில், வாகனங்கள் அணிவகுத்தும், தாறுமாறாகவும் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ரோடுகளை, 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி பலர் வாகனங்களை நிறுத்திச் செல்வது வாடிக்கையாக உள்ளது. மேலும், 'நோ - பார்க்கிங்' என அறிவிப்பு வைக்கப்பட்ட பகுதியிலும், விதிமுறைகளை மீறி தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒரு சிலர் ரோட்டோரம் நிறுத்தாமல், ரோட்டிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதால், மற்ற வாகனங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோவை மற்றும் கேரளாவுக்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் பொள்ளாச்சி நகரம் அமைந்துள்ளதால், நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
எனவே, அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கேற்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நிலவும் நெரிசல் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது.
இவ்வாறு, கூறினர்.