/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டோரத்தில் வரையாடுகள் உலா கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணியர் ரோட்டோரத்தில் வரையாடுகள் உலா கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணியர்
ரோட்டோரத்தில் வரையாடுகள் உலா கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணியர்
ரோட்டோரத்தில் வரையாடுகள் உலா கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணியர்
ரோட்டோரத்தில் வரையாடுகள் உலா கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணியர்
ADDED : ஜூன் 05, 2024 01:27 AM

பொள்ளாச்சி;வால்பாறை மலைப்பாதையில், ரோட்டோரத்தில் சர்வ சாதாரணமாக உலா வரும் வரையாடுகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
நீலகிரி வரையாடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை, நான்காயிரம் அடி உயரத்துக்கு மேலே உள்ள மலை உச்சிகளில் மட்டும் வாழும் பண்பு உடையவை.
அழிந்து வரும் இனங்களில் ஒன்றான இந்த விலங்கு, காட்டாடு இனத்தில் மிகவும் பெரிய உடலமைப்பை கொண்டதாகும்.
இதன் மொத்த எண்ணிக்கையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, கேரளா மாநிலம், இரவிகுளம் தேசிய பூங்கா, பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம், நீலகிரி முக்கூர்த்தி மலைகளில், வரையாடுகள் காணப்படுகின்றன.
இதன் இனப்பெருக்க காலம், ஜூன் முதல் ஆக., வரையிலான தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பாதுகாப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், வால்பாறை மலைப்பாதையில் ரோட்டோரத்தில் சர்வ சாதாரணமாக, வரையாடுகளை காண முடிவதால், சுற்றுலாப்பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
வார இறுதிநாட்களில், அதிகப்படியான சுற்றுலாப் பயணியர், வால்பாறை சென்று திரும்புகின்றனர். தற்போது, வனம் செழுமையடைந்து வரும் நிலையில், யானை, மான் உள்ளிட்ட விலங்கினங்களை எளிதில் காண முடிகிறது.
அதேபோல, மலைச்சரிவுகளில் வரையாடுகள் உலா வருகின்றன. மலைப்பாதையில் செல்வோர், வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்காமல் செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது,' என்றனர்.