/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனலட்சுமி நகர் பாலம் அகலப்படுத்த வேண்டும் தனலட்சுமி நகர் பாலம் அகலப்படுத்த வேண்டும்
தனலட்சுமி நகர் பாலம் அகலப்படுத்த வேண்டும்
தனலட்சுமி நகர் பாலம் அகலப்படுத்த வேண்டும்
தனலட்சுமி நகர் பாலம் அகலப்படுத்த வேண்டும்
ADDED : ஜூன் 10, 2025 09:44 PM

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரில் உள்ள குறுகிய பாலத்தால், பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய ஊர், பாலாஜி நகர், குமரன் நகர், பகவான் கார்டன், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டை அடைய தனலட்சுமி நகர் வழியாக செல்லும் பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பாதையில் உள்ள சிறு பள்ளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது அந்த பாலம் தற்போதைய போக்குவரத்துக்கு ஏற்றபடி இல்லாமல், குறுகியதாக இருப்பதால், வாகனங்களில் செல்பவர் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'பாலம் குறுகிய அளவில் உள்ளது. இதிலும், பாலத்தின் ஒரு பகுதியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஸ்கூல் பஸ் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் உள்ளது. பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள இணைப்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பாலத்தை அகலப்படுத்தினால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பாலத்தை அகலப்படுத்தி கட்ட, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.