/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெ.நா.பாளையம் மேம்பாலத்துக்கு எப்ப வருமோ மின் விளக்குகள்! பெ.நா.பாளையம் மேம்பாலத்துக்கு எப்ப வருமோ மின் விளக்குகள்!
பெ.நா.பாளையம் மேம்பாலத்துக்கு எப்ப வருமோ மின் விளக்குகள்!
பெ.நா.பாளையம் மேம்பாலத்துக்கு எப்ப வருமோ மின் விளக்குகள்!
பெ.நா.பாளையம் மேம்பாலத்துக்கு எப்ப வருமோ மின் விளக்குகள்!
ADDED : ஜூன் 10, 2025 09:44 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் மின் விளக்குகள் இன்னும் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் பாலத்தில் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில், பெரியநாயக்கன்பாளையம், எல்.எம்.டபிள்யூ., பிரிவு, வண்ணான் கோவில் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை போக்குவரத்து நெருக்கடி நிலவியதால், தேசிய நெடுஞ்சாலை துறையின் ஆண்டு நிதி திட்டத்தில், 115 கோடி ரூபாய் செலவில், 1.6 கி.மீ., தூரத்துக்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா அருகே தொடங்கி, ஜோதிபுரத்தில் பாலம் நிறைவடைகிறது. பாலம் கட்டுமான பணி முடிந்து, தற்போது போக்குவரத்து துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை பாலத்தின் மேல் பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பாலத்தின் மேல் பாதை வழியாக செல்பவர்கள், குறிப்பாக, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இரவு நேரங்களில் பாலத்தின் மேல் பகுதியில் செல்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ''புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் இரு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்க, 78 லட்ச ரூபாய் தொகை ஒதுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தொகை ஒதுக்கப்படவில்லை. நிதி அளிக்கப்பட்டவுடன், உடனடியாக பணிகள் தொடங்கும்' என்றனர்.