ADDED : ஜூன் 12, 2025 09:51 PM
வால்பாறை; வால்பாறை கக்கன்காலனியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்குள், பகல் நேரத்தில் பாம்புகளும், இரவு நேரத்தில் சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகளும் வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் கக்கன் காலனி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'கக்கன் காலனியில், நடைபாதை, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இரவு நேரங்களில், எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். கூடுதல் தெருவிளக்குகள் அமைப்பதோடு, வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.