/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கோர்ட்டில் ஆஜர் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கோர்ட்டில் ஆஜர்
போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கோர்ட்டில் ஆஜர்
போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கோர்ட்டில் ஆஜர்
போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கோர்ட்டில் ஆஜர்
ADDED : ஜூன் 12, 2025 09:53 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக,. ஐந்து ஆண்டுகளுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த, 60 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராயினர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த, 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2019, மார்ச் 2ம் தேதி பஸ் ஸ்டாண்ட் அருகே, போராட்டங்களில் ஈடுபட்ட, 15 பெண்கள் உட்பட, 90 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாலியல் வழக்கில் கைதான ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், பாலியல் வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த, 90 பேர் ஆஜராக கோரி, பொள்ளாச்சி ஜே.எம்.,1 கோர்ட் மாஜிஸ்திரேட் சம்மன் வழங்கினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பின், அப்போதைய தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், 60 பேர் நேற்று கோர்ட்டில்ஆஜராயினர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வரும், ஜூலை 19ம் தேதி மீண்டும் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதாக, தி.மு.க., வக்கீல்கள் தெரிவித்தனர்.