/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திறந்து கிடக்கிறது பாதாள சாக்கடை குழிl சரவணா நகரில் காத்திருக்கு ஆபத்து திறந்து கிடக்கிறது பாதாள சாக்கடை குழிl சரவணா நகரில் காத்திருக்கு ஆபத்து
திறந்து கிடக்கிறது பாதாள சாக்கடை குழிl சரவணா நகரில் காத்திருக்கு ஆபத்து
திறந்து கிடக்கிறது பாதாள சாக்கடை குழிl சரவணா நகரில் காத்திருக்கு ஆபத்து
திறந்து கிடக்கிறது பாதாள சாக்கடை குழிl சரவணா நகரில் காத்திருக்கு ஆபத்து
ADDED : மே 10, 2025 01:43 AM

கோவை : கோவை மணியகாரம்பாளையம் சரவணா நகர் பகுதியில், மழை நீர் வடிகால் மேனுவல் இல்லாமல், குழி திறந்து கிடக்கிறது. விபத்து நடந்து பாதிப்பு ஏற்படுவதற்கு முன், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாநகராட்சி பகுதியில், ஆங்காங்கே பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பழைய குழாய்கள் சேதமடைந்தால் புதிதாக பதிக்கப்படுகிறது.
ரோட்டின் குறுக்கே கட்டப்படும் மழை நீர் வடிகாலில் அடைப்பு நீக்குவதற்காக, மேனுவல் அமைக்கப்படுகிறது. அவ்வாறு, மணியகாரம்பாளையம் அருகே சரவணா நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள மழை நீர் வடிகாலில், மேனுவல் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது.
வாகனங்களில் செல்வோர் கவனம் சிதறினால், குழியில் இறங்கி, விபத்தில் சிக்குவர். இரவு நேரங்களில் குழி இருப்பதே தெரியாது.
அவ்வழியாகச் சென்ற ஒருவர், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், குழியில் மரப்பலகைகளை வைத்துச் சென்றிருக்கிறார்.
விபத்து ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் முன், மேனுவல் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடம் மட்டுமின்றி, நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோல், மழை நீர் வடிகால் திறந்த நிலையில் காணப்படுகிறது.
அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பழைய மேம்பாலம் அருகே, காட்டூரில் இருந்து வரும் வழித்தடத்தில், வடிகால் மேனுவல் உடைந்து கிடக்கிறது. மழை காலத்தில் தண்ணீர் ரோட்டில் வழிந்தோடுவதற்கு வாய்ப்புள்ளது.


