/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆரோக்கியமான கட்டுமான பணிக்கு உரிமையாளர்-பொறியாளர் உறவு முக்கியம் ஆரோக்கியமான கட்டுமான பணிக்கு உரிமையாளர்-பொறியாளர் உறவு முக்கியம்
ஆரோக்கியமான கட்டுமான பணிக்கு உரிமையாளர்-பொறியாளர் உறவு முக்கியம்
ஆரோக்கியமான கட்டுமான பணிக்கு உரிமையாளர்-பொறியாளர் உறவு முக்கியம்
ஆரோக்கியமான கட்டுமான பணிக்கு உரிமையாளர்-பொறியாளர் உறவு முக்கியம்
ADDED : மே 10, 2025 01:44 AM
வீடு கட்டுவதில் திட்டமிடுதல் மிக அவசியம். தனது திட்டத்தை சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடமும் கலந்து ஆலோசித்து, அவர்களின் விருப்பங்களை கேட்பதோடு, ஆலோசனைகளையும் பெற வேண்டும்.
முதற்கட்டமாக கட்டட கலையில் சிறந்த, நல்ல எண்ணங்களை கொண்ட, திறமையான செயல் ஆற்றல் உடைய, பொறியாளரின் துணையை நாட வேண்டும். பொறியாளரிடம் மனம் திறந்து கட்டடம் சம்பந்தமான விவரங்களையும், பொருளாதார விவரங்களையும் தீர ஆலோசித்து, தனக்கு ஏற்றார் போல் மாதிரி வரைபடம் ஒன்று தயாரித்தல் வேண்டும்.
இம்மாதிரி வரைபடத்தினை சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்து, அவர்களின் கருத்துகளையும், சம்மதத்தினையும் பெறுதல் வேண்டும் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.
அவர் பகிர்ந்து கொண்டதாவது...
முடிவு செய்யப்பட்ட வரைபடத்துடன் ஒரு நல்ல கட்டட வடிவமைப்பாளரை அணுகி, கட்டடம் சம்பந்தமான அனைத்து வரைபடங்கள், பிளான், முன் முகப்புத்தோற்றம் ஆகியவற்றை தயார் செய்து பெறுதல் வேண்டும். ஆர்க்கிடெக்ட் தந்த வரைபடத்திற்கு மண் மற்றும் கட்டமைப்பு பொறியாளரிடம் தகுந்த ஆலோசனைகள் பெறுவது அவசியம்.
கட்டடம் கட்டுவதற்கான அனைத்து வரைபடங்கள், சிவில், கட்டுமான, மின்சாரம், குழாய்கள், காம்பவுண்ட் சுவர் உள்ளிட்ட அம்சங்கள் தயார் செய்யப்பட்டு, கட்டட உரிமையாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவற்றில் மிக முக்கியமான வேலைகளில் ஒன்று, செலவுத்தொகை மதிப்பீடு செய்தல். இதில் பிழை ஏற்படின், கட்டட வேலையில் பிற்காலத்தில் பல குளறுபடிகளை சந்திக்க நேரிடும்.
விலையை விசாரிக்கணும்
கட்டடத்திற்கான பொருட்களின் தரம் மற்றும் விலைவாசி பற்றி சந்தையில் தீர விசாரித்து, பொருட்களின் விலையை அறிதல் வேண்டும்.
அனைத்து தர வேலைக்கான மதிப்பீடு அதாவது, அனைத்து தர தொழிலாளர்களின் சுய விபரங்கள் பெறப்பட்டு, மொத்த கூலித்தொகை விபரத்தினை தயார் செய்ய வேண்டும்.
கட்டடம் கட்டுவதற்கு, ஆரம்பகட்ட வேலைகள் செய்வதற்கு இடம் சுத்தம் செய்தல், தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும். மொத்த செலவு தொகையை கணக்கிட்டு, கட்டட உரிமையாளரிடம் பொறியாளர் கலந்து பேசுவது நல்லது. இரு தரப்பினர் இடையே சிறந்த உறவு இருப்பது அவசியம்.
தேவையெனில்வரைபடங்களில் மாறுதல் செய்து, கட்டட உரிமையாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இப்படி செய்தால் பணிகளில் எந்தவித இடையூறும் இருக்காது; குறித்த நேரத்திலும் முடிவடையும்.
இவ்வாறு, கூறினார்.


