/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குஷி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குஷி
கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குஷி
கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குஷி
கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குஷி
ADDED : மே 10, 2025 01:43 AM

தொண்டாமுத்தூர்,: கோவை குற்றாலத்தில், கோடை விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி, போளாவாம்பட்டி, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அடர் வனப்பகுதியின் உள்ளே உள்ள இந்த நீர்வீழ்ச்சியில், வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமான, வார நாட்களில், 500 முதல் 1,000 பேர் வரை மட்டுமே வருவார்கள்.
தற்போது, கோடை விடுமுறை என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், வார நாட்களில், 2,000 பேர் வீதமூம், வார விடுமுறை நாட்களில், 2,500 முதல் 2,800 பேர் வரை வந்து செல்கின்றனர். நேற்று மொத்தம், 1,972 பேர் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.


