Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொதுத்தேர்வில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு

பொதுத்தேர்வில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு

பொதுத்தேர்வில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு

பொதுத்தேர்வில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு

ADDED : மே 21, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
கோவை; சின்னவேடம்பட்டி, கவுமார மடாலய வளாகத்தில் செயல்படும், தவத்திரு கந்தசாமி சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவி கமலிஸ்ரீ 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாநில அளவில் இரண்டாவது இடமும் பிடித்துள்ளார். மாணவர் ஹரிஸ் 485, மாணவி யாழினி 482 மதிப்பெண்களுடன் இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர் கைலாஷ் 600க்கு 569 மதிப்பெண், மாணவர் ஹரூன் 568 மதிப்பெண், மாணவர் தீபக்குமார் 566 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கணிணி பயன்பாடுகள் பாடத்தில் மாணவர்கள் ரவிகிரண், ரோகித், அஸ்வினி ஆகியோரும், கணக்கு பதிவியல் பாடத்தில், மாணவி மணிமேகலாவும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று, சாதனை புரிந்துள்ளனர்.

மாணவர்களை பள்ளியின் செயலாளரும், கவுமார மடாலயத்தின் ஆதின கர்த்தருமான குமரகுருபர சுவாமிகள் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us