/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பேரூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 26 மனுக்கள் பேரூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 26 மனுக்கள்
பேரூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 26 மனுக்கள்
பேரூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 26 மனுக்கள்
பேரூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 26 மனுக்கள்
ADDED : மே 21, 2025 12:11 AM

தொண்டாமுத்தூர், ;பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, 24 வருவாய் கிராமங்களுக்கும், ஜமாபந்தி, பேரூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
நேற்று காலை, 10:00 மணி முதல் மாலை வரை, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட கலால் மேற்பார்வை அலுவலர் சிவகுமாரி மற்றும் பேரூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டனர்.
முதல் நாளான நேற்று, ஆலாந்துறை உள்வட்டத்திற்குட்பட்ட ஆலாந்துறை, பூலுவபட்டி, மத்வராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி, செம்மேடு ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
நேற்றைய முகாமில், இலவச பட்டா வழங்கக்கோரியும், உதவித்தொகை வழங்கக்கோரியும், வாரிசு சான்றிதழ் வழங்க கோரியும், நில அளவை செய்யக்கோரியும் மொத்தம், 26 மனுக்கள் பெறப்பட்டன. இன்று மாதம்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.