/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.டி.சி.ஏ., போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய கோவை வீரர் சி.டி.சி.ஏ., போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய கோவை வீரர்
சி.டி.சி.ஏ., போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய கோவை வீரர்
சி.டி.சி.ஏ., போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய கோவை வீரர்
சி.டி.சி.ஏ., போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய கோவை வீரர்
ADDED : மே 21, 2025 12:10 AM

கோவை,; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி. ஏ.,) சார்பில், ஒன்றாவது டிவிஷன் போட்டி, எஸ்.என்.எம்.வி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது. கோவை டஸ்கர்ஸ் அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, கோவை டஸ்கர்ஸ் அணி, 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 210 ரன்கள் எடுத்தது. வீரர்கள் கோகுல் மூர்த்தி, 49 ரன்கள், கிருபாகர், 46 ரன்கள், சோமசுந்தரம், 32 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் கவுதம் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்களும், கவுதமராஜ் மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியினர், 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 181 ரன்கள் எடுத்தனர்.
வீரர்கள் செந்தில்குமார், 66 ரன்களும், ஹரி பாண்டியா, 39 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் கிருபாகர் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.