/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாநகராட்சிக்கு 3 நாட்களாக பில்லுார்-3வது திட்ட தண்ணீர் வரலைகோவை மாநகராட்சிக்கு 3 நாட்களாக பில்லுார்-3வது திட்ட தண்ணீர் வரலை
கோவை மாநகராட்சிக்கு 3 நாட்களாக பில்லுார்-3வது திட்ட தண்ணீர் வரலை
கோவை மாநகராட்சிக்கு 3 நாட்களாக பில்லுார்-3வது திட்ட தண்ணீர் வரலை
கோவை மாநகராட்சிக்கு 3 நாட்களாக பில்லுார்-3வது திட்ட தண்ணீர் வரலை
ADDED : ஜூன் 27, 2025 10:07 PM
கோவை; கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்போருக்கு பில்லுார் மூன்றாவது திட்டத்துக்கு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தண்ணீர் எடுக்கப்படுகிறது.
சிறுவாணி, பில்லுார்-1 மற்றும், 2வது திட்டத்தில் எடுக்கப்படும் தண்ணீரின் அளவு குறையும்போது, பற்றாக்குறையை சமாளிக்க பில்லுார்-3வது திட்டத்தில் கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படும். முருகையன் பரிசல் துறை பகுதியில் தலைமை நீரேற்று நிலையம் உள்ளது. பில்லுார் அணை நிரம்பும் சமயங்களில், மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அத்தருணங்களில், கோவைக்கு தண்ணீர் எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வழக்கமாக தேவைக்கேற்ப, ஆறு கோடி முதல், 12 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுப்பது வழக்கம். கடந்த மூன்று நாட்களாக பில்லுார்-3வது திட்டத்தில் கோவைக்கு தண்ணீர் எடுக்கவில்லை.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''பில்லுார் அணை நிரம்பி வழியும்போது, தண்ணீர் ஆற்றில் சென்று விடுகிறது. அதனால், மூன்றாவது திட்டத்தில் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை இப்படி ஒரு பிரச்னை வந்ததில்லை என்பதால், நேரில் சென்று ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டியிருக்கிறது,'' என்றார்.