Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ADDED : ஜூன் 27, 2025 11:05 PM


Google News

'தினமலர்' நாளிதழ் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்


மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை. பங்கேற்பு: கல்வி ஆலோசகர் அஸ்வின், சென்னை அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன்.

புரந்தரதாசர் ஆராதனை


பாரதிய வித்யா பவன் கோவை கிளை சார்பில், சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. டி.பி., ரோடு, ஆர்.எஸ்.புரம், பாரதிய வித்யா பவன் வளாகத்தில் மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது.

மாணவர்களுக்கு கவுரவம்


2024 -25ம் கல்வியாண்டில், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவுமார மடாலயம், குமரகுரு கலையரங்கத்தில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. சரவணபுரம் கவுமார மடாலயம் தவத்திரு ராமானந்த அடிகளார் கல்வி நிறுவனங்கள் மற்றும் துடியலுார் மணியன்குலம் காளியம்மாள் அறக்கட்டளை சார்பில் நடக்கிறது.

அரங்காயணம்


ராம்நகர், ராமர் கோவிலில், 'அரங்காயணம்' எனும் தமிழ் ஆவணப்படக் காணொளி திரையிடப்படுகிறது. ஸ்ரீரங்கத்திலிருந்து இறைவன் ரங்கநாதரின் பயணம், 48 ஆண்டுகளுக்கு பிறகு திரும்புதல் குறித்த வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையிலான காணொளியை, மாலை, 5:30 முதல் 8:30 மணி வரை பார்க்கலாம்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us