ADDED : மே 27, 2025 09:53 PM
புல்லுக்காடு பகுதியில் லாட்டரி விற்றவர் கைது
உக்கடம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, பெரிய கடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட், 27வது பிளாக் பின்புறம் சென்று பார்த்த போது, வாலிபர் ஒருவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்.
போலீஸ் விசாரணையில், அவர் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட், ஆறாவது பிளாக்கை சேர்ந்த பிரகாஷ், 22 என்பது தெரியவந்தது. லாட்டரி சீட்டுகள், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மனைவியுடன் தகராறு; வாலிபர் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் நவீன் குமார், 24. சிங்காநல்லுார், நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் மனைவியுடன் தங்கியிருந்து ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 26ம் தேதி மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த நவீன் குமார், ஆத்திரத்தில் அறைக்குள் சென்று, மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிங்காநல்லுார் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.