/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரும்பு ராடால் தாக்கி போன் பறித்துச் சென்ற ஆறு பேர் கைது இரும்பு ராடால் தாக்கி போன் பறித்துச் சென்ற ஆறு பேர் கைது
இரும்பு ராடால் தாக்கி போன் பறித்துச் சென்ற ஆறு பேர் கைது
இரும்பு ராடால் தாக்கி போன் பறித்துச் சென்ற ஆறு பேர் கைது
இரும்பு ராடால் தாக்கி போன் பறித்துச் சென்ற ஆறு பேர் கைது
ADDED : மே 27, 2025 09:53 PM

போத்தனூர் : கோவை, செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மார்ட்டின், 59 கார்லின் பிரபு என்பவருடன் வேலை பார்த்து வந்தார். கடந்த, 22ம் தேதி இரவு இருவரும், கட்டுமான பணி நடக்குமிடத்தில் தூங்கினர்.
அப்போது அடையாளம் தெரியாத, நான்கு பேர் கும்பல் ஒன்று மார்ட்டின் தலையில் இரும்பு ராடால் தாக்கி, மொபைல் போனை பறித்து தப்பியது. மார்ட்டின் புகாரின்படி, செட்டிபாளையம் போலீசார் மர்ம கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில், பெரியகுயிலி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்திற்குள்ளாகி, வலது கையில் முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், 19, இடையர்பாளையத்தை சேர்ந்த ஆகாஷ், 21 என்பதும், மார்ட்டினிடம் மொபைல்போனை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரிந்தது.
மேலும் லியோ ஆகாஷ், 20, மெய்யரசன், 22, அய்யப்பன், 19 மற்றும் ஒரு சிறுவனும், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. ஆறு பேரையும் கைது செய்த போலீசார், மொபைல்போன் ஒன்று, ரொக்கம் ஆறாயிரம் ரூபாய் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆகாஷ், விக்னேஷ் ஆகியோர் மீது காட்டூர், ரேஸ்கோர்ஸ் மற்றும் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.