/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இளநீர் விலை ரூ.1 உயர்வு விவசாயிகளுக்கு அறிவுரை இளநீர் விலை ரூ.1 உயர்வு விவசாயிகளுக்கு அறிவுரை
இளநீர் விலை ரூ.1 உயர்வு விவசாயிகளுக்கு அறிவுரை
இளநீர் விலை ரூ.1 உயர்வு விவசாயிகளுக்கு அறிவுரை
இளநீர் விலை ரூ.1 உயர்வு விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : மார் 23, 2025 10:05 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 44 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 17,500 ரூபாய். கடந்த மாதத்தை ஒப்பிடுகையில், இம்மாதம் இளநீர் மகசூல் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. தேவைக்கு ஏற்ப இளநீர் கிடைக்காததால், கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இளநீரை எடைக்கு விற்பனை செய்யும் விவசாயிகள் எக்காரணத்தைக் கொண்டும், 37 நாட்களுக்கு முன் அறுவடை செய்ய வேண்டாம். அவ்வாறு அறுவடை செய்தால் இளநீரின் எடை மிகவும் குறைந்து, நஷ்டம் உண்டாகும். குறைந்த விலைக்கும் விற்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.