/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு; மூன்று பேர் கைது பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு; மூன்று பேர் கைது
பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு; மூன்று பேர் கைது
பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு; மூன்று பேர் கைது
பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு; மூன்று பேர் கைது
ADDED : மார் 23, 2025 10:05 PM
பொள்ளாச்சி : திண்டுக்கல் பகுதியைச்சேர்ந்தவர் மல்லிகா, 69. இவர், கடந்த, 8ம் தேதி, பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு பஸ்சில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர்கள், அவரது கழுத்தில் இருந்த, 9 பவுன் தங்க செயினை, திருடிச்சென்றனர். இதையடுத்து, அவர், பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வழக்குப்பதிந்து, தனிப்படை அமைத்து, போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்த சிசிடிவி பதிவு அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த அமுதா, 39; தேவயானி, 23; மீனா, 37, ஆகியோர் செயினை திருடியிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பேரில், அவர்களை கைது செய்த போலீசார், திருடுபோன தங்க செயினையும் மீட்டனர்.
அவர்களை, கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட பெண்களுக்கு, அசோக் நகர், வடபழனி, ஜோலார்பேட்டை, உடுமலை, திருப்பூர் வடக்கு மற்றும் நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரிந்தது.