ADDED : ஜூன் 30, 2025 06:25 AM
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் கோட்டூர் மைக்கேல் பாளையத்தை சேர்ந்தவர் டேவிட் ஆரோக்கியம், 22.
இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் டேவிட் ஆரோக்கியம், நண்பர் முருகனுடன் சேர்ந்து மது அருந்தினார்.
அப்போது திடீரென டேவிட் ஆரோக்கியம் மயங்கி விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.
உறவினர்கள் புகாரின் பேரில் வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.