/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போக்சோ கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது போக்சோ கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
போக்சோ கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
போக்சோ கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
போக்சோ கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
ADDED : ஜூன் 30, 2025 06:25 AM
கோவை:
சிறுமிக்கு பாலியல் கொடுத்து, போக்சோ வழக்கில் கைதான நபரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
கோவையை சேர்ந்த முத்துகுமார், 56. அவரது வீட்டு அருகில் வசிக்கும் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்தார்.
இது தொடர்பாக, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 6ம் தேதி முத்துகுமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வடக்கு துணை கமிஷனர் ஆகியோர் பரிந்துரைத்தனர்.
பரிந்துரையை ஏற்ற, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், முத்துகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.