/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விலங்கு வேட்டையில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை விலங்கு வேட்டையில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை
விலங்கு வேட்டையில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை
விலங்கு வேட்டையில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை
விலங்கு வேட்டையில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை
ADDED : ஜூன் 30, 2025 06:40 AM

மேட்டுப்பாளையம்:
விலங்கு வேட்டையின்போது, வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோவை மாவட்டம், காரமடை சுரண்டை மலைக்கிராம பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்ஜித், 23, அவரது உறவினர்கள் முருகேசன், 37, பாப்பையா, 60. இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு அத்திக்கடவு வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றனர்.
அப்போது, மர அணில் வேட்டையாடிய நிலையில், முருகேசன், அதை சமைக்க வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
இந்நிலையில், பாப்பையா மற்றும் சஞ்ஜித் ஆகியோர் வனப்பகுதிக்குள் மீண்டும் வேட்டையாடச் சென்றனர். அப்போது இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
மது போதையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், நேற்று அதிகாலை, 5:00 மணி அளவில், பாப்பையா, தன்னிடம் உள்ள நாட்டு துப்பாக்கியால் சஞ்ஜித்தை சரமாரியாக சுட்டார்.
இதில், நெஞ்சு, வயிறு என ஐந்து இடங்களில் குண்டு பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த பில்லுார் துணை போலீஸ் ஸ்டேஷன் போலீசார், முருகேசனை கைது செய்தனர். தலைமறைவான பாப்பையாவை தேடி வருகின்றனர்.