/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அன்பு கரங்கள் நிகழ்ச்சிக்கு 100 மாணவர்கள் பயணம் அன்பு கரங்கள் நிகழ்ச்சிக்கு 100 மாணவர்கள் பயணம்
அன்பு கரங்கள் நிகழ்ச்சிக்கு 100 மாணவர்கள் பயணம்
அன்பு கரங்கள் நிகழ்ச்சிக்கு 100 மாணவர்கள் பயணம்
அன்பு கரங்கள் நிகழ்ச்சிக்கு 100 மாணவர்கள் பயணம்
ADDED : செப் 09, 2025 10:40 PM
கோவை; கோவையில், 'நான் முதல்வன்' திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்க்கை பெற்ற மாணவர்கள், சென்னையில் நடைபெறும் முதல்வரின் அன்பு கரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பள்ளி படிப்புடன் நின்று விடாமல், அவர்கள் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பை வழங்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அம்முயற்சியால், மாவட்டத்தில் உயர்கல்வி தொடரும் மாணவர்களின் விகிதம், 98 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் தனிப்பட்ட முயற்சியால், உயர்கல்வியில் சேர்க்கை பெற்ற, 42 மாணவியர், 35 மாணவர்கள் உட்பட 100 பேர் சென்னையில் நடைபெறும், 'முதல்வர் அன்பு கரங்கள்' நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
இவர்களுக்கு, அரசு சார்பில் உயர்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. மாணவர்களின் போக்குவரத்து செலவை, மாவட்ட நிர்வாகம் ஏற்றுஉள்ளது.