/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 4வது டிவிஷன் கிரிக்கெட்; எக்கர் ஸ்போர்ட்ஸ் வெற்றி 4வது டிவிஷன் கிரிக்கெட்; எக்கர் ஸ்போர்ட்ஸ் வெற்றி
4வது டிவிஷன் கிரிக்கெட்; எக்கர் ஸ்போர்ட்ஸ் வெற்றி
4வது டிவிஷன் கிரிக்கெட்; எக்கர் ஸ்போர்ட்ஸ் வெற்றி
4வது டிவிஷன் கிரிக்கெட்; எக்கர் ஸ்போர்ட்ஸ் வெற்றி
ADDED : செப் 09, 2025 10:41 PM
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், நான்காவது டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.ஜி. - ஐ.எம்.எஸ். உள்ளிட்ட மைதானங்களில் நடக்கின்றன.
எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், காஸ்மோ விலேஜ் ஆர்.பி.இ.எஸ்.ஏ. அணியும் மோதின.
எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 220 ரன் எடுத்தனர். வீரர்கள் சிவக்குமார், 47 ரன், அழகப்பன், 41 ரன், மாரிமுத்து, 40 ரன் எடுத்தனர். காஸ்மோ விலேஜ் அணியினர், 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 217 ரன் எடுத்தனர்.
வீரர் இப்ராஹிம் இக்பால் இமானி, 42 ரன், ரிஷிகேஷ், 41 ரன், நவீன்குமார், 30 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சண்முகசுந்தரன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.