/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ யோக விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் யோக விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
யோக விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
யோக விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
யோக விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : மார் 13, 2025 11:57 PM
கோவை; குனியமுத்துார் அபர்ணா மருத்துவமனை - சுந்தாபுரம் செல்லும் ரோடு, இடையர்பாளையம், நிர்மல மாதா கான்வென்ட் எதிரில் உள்ள, சன் கார்டனில் அமைந்துள்ளது, யோக விநாயகர் கோவில்.
கோவில் கும்பாபிேஷகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. இதற்கான விழா, இன்று மாலை, 6:30 மணிக்கு, மகா கணபதி பூஜையுடன் துவங்குகிறது. நாளை காலை, 8:30 மணிக்கு, வேதபாராயணம், காப்பு கட்டுதல் கோ பூஜை, முதற்கால யாக சாலை பூஜையும், காலை, 11:00 மணிக்கு, மகாலட்சுமி அம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதலும், மாலை, 4:00 மணிக்கு, அஷ்டபந்தனம் சாத்துதலும், மாலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜையும் நடக்கின்றன.
வரும் 16ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும், காலை, 8:45க்கு கலசங்கள் புறப்பாடும், 9:00 மணிக்கு விமானகோபுரங்களுக்கு கும்பாபிேஷகமும், 9:50 மணிக்கு மகா கும்பாபிேஷகமும் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.