/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மத்திய அரசுடன் மோதல் போக்கு; மாநிலத்துக்கு பாதிப்பே! பொதுமக்கள் கருத்து மத்திய அரசுடன் மோதல் போக்கு; மாநிலத்துக்கு பாதிப்பே! பொதுமக்கள் கருத்து
மத்திய அரசுடன் மோதல் போக்கு; மாநிலத்துக்கு பாதிப்பே! பொதுமக்கள் கருத்து
மத்திய அரசுடன் மோதல் போக்கு; மாநிலத்துக்கு பாதிப்பே! பொதுமக்கள் கருத்து
மத்திய அரசுடன் மோதல் போக்கு; மாநிலத்துக்கு பாதிப்பே! பொதுமக்கள் கருத்து
ADDED : மார் 14, 2025 12:35 AM

கோவை: மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாள்வது தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதா, இல்லையா என, பொதுமக்களிடம் கேட்டோம். நிச்சயமாக இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஸ்ரீதேவி, ராம்நகர், தனியார் நிறுவன ஊழியர்: நிச்சயமாக. மத்திய அரசுடன் மோதல் போக்கு இருப்பதால் பல்வேறு விதங்களிலும் வளர்ச்சி பாதிக்கிறது. இதன் காரணமாக பிற மாநிலங்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நமக்கு கிடைப்பதில்லை.
எஸ்.ராஜேஸ்குமார், கவுண்டம்பாளையம், தொழில்முனைவோர்: மோதல் போக்கு இருப்பதாக மாநில அரசு தான் தெரிவிக்கிறது. ஆனால், மத்திய அரசு சார்பில் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் நம் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படும். அவர்கள் தேவையை மட்டும் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
ஜி.கவிதா, கல்லுாரி பேராசிரியை, பீளமேடு: நிச்சயம் முன்னேற்றம் பாதிக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் தேக்கம் ஏற்படும். நமக்கு கிடைக்க வேண்டிய விசயங்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். குறிப்பாக உயர்கல்வித்துறையில் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும்.
ஐ.இந்துஜா காஞ்சி, இல்லத்தரசி, நஞ்சுண்டாபுரம்: ஒவ்வொரு விசயத்திலும், தமிழக அரசு, மத்திய அரசுடன் மோதல் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இதன் காரணமாக பல விசயங்களில் நம் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நம் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பிற மாநிலங்களுக்கு செல்கின்றன. குறிப்பாக தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.
ஆர்.ரேகா, கல்லுாரி பேராசிரியை, வடவள்ளி: வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுவது இயல்பு தான். ஏனெனில், மாநில அரசுகள் சில விசயங்களுக்கு மத்திய அரசை சார்ந்து தான் இருக்க வேண்டியுள்ளது. அந்த விசயங்களில் நாம் பின்தங்குவோம். அதேபோல் நமக்கு கிடைக்க வேண்டிய நிதி ஆதாரங்கள் பாதிக்கப்படும்.